5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், திருச்சியில் ரூ.315 கோடியில் அமையும் டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இணையதளம் மூலம் நவம்பர் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
டைடல் பூங்கா
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை தொடங்க, சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்துக்கு அருகே ரூ.315 கோடி மதிப்பில் புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரின்போது, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார்.
நவம்பர் 6-ந்தேதி கடைசி நாள்
அதன்படி, தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் (எல்காட்) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) ஆகியவற்றின் மூலம் பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, திருச்சி மாநகராட்சி அதை இறுதி செய்து கொடுத்துள்ளது. இங்கு ரூ.315 கோடியில் 5 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் அலுவலகமும், கூட்ட அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டரை தமிழக அரசு நேற்று வெளியிட்டு உள்ளது. அதாவது, tntenders.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 6-ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18 மாதங்களில் முடிக்க திட்டம்
தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த புதிய டைடல் பூங்கா 5.58 லட்சம் சதுர அடியில் அமைய இருக்கிறது. 18 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடந்த மே மாதம் தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.