கோபாலப்பட்டினத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP




கோபாலப்பட்டினம் வாக்காளர்களுக்கு  இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP நன்றி தெரிவித்தார்
 
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த கோபாலப்பட்டினம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி M.P கோபாலபட்டினத்திற்கு வருகை புரிந்து நன்றி தெருவித்தார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம்  தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.நவாஸ் கனி எம்.பி வேட்பாளராக இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய கூட்டணி கட்சி சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கே.நவாஸ் கனி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தமைக்காக இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கே.நவாஸ் கனி எம்.பி ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து நன்றி தெருவித்து வருகிறார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள 
கோபாலப்பட்டினத்தில் 05-10-2024 சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் 
கே.நவாஸ் கனி எம்.பி ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் தோழமை கட்சி நிர்வாகிகள் & அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments