தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும், ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) பத்துமாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு, அறந்தாங்கி மர்க்கஸில், 06.10.2024 ஞாயிற்றுக்கிழமையன்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும், ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி  இப்ராஹீம் (அலை) பத்துமாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு, அறந்தாங்கி மர்க்கஸில், 06.10.2024 ஞாயிற்றுக்கிழமையன்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, மாநிலப் பொதுச் செயலாளர் A.முஜிபுர் ரஹ்மான், அவர்கள் தலைமை வகித்தார்கள்.

மாவட்டத் தலைவர் H.சித்திக் ரகுமான்.,B.E, மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் S.ரபீக் ராஜா, துணைத்  தலைவர் முஹம்மது  மீரா, துணைச் செயலாளர்கள் A.ஷேக் அப்துல்லாஹ், முகமது மீரான், M.ஷேக் அப்துல்லாஹ், அப்துல் ரகுமான் ரஹுஃப், மருத்துவ அணிச் செயலாளர் சபியுபுல்லா,  வர்த்தகரணி செயலாளர் உஸ்மான் அலி,மாணவரணி செயலாளர் ரகுமத்துல்லா MISC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில், மாநில பொதுச் செயலாளர் A.முஜிபுர் ரஹ்மான் மற்றும் N.ராஜ் முகம்மது MISc ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

 இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா

1. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து 
இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை   இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த 
 செயற்குழு வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின்
சொத்துக்களையும்  பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

இஸ்ரேலின் அராஜகங்கள்

2. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கெதிரான இன அழிப்பில் இதுவரை சுமார் 42000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு படைகளை தாக்குகிறோம் என சொல்லிக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று
குவிக்கு ஜியோனிஸ பயங்கரவாதிகளை இந்த செயற்குழு வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். 
இந்திய அரசு வழக்கம்போல் நடுநிலை நாடகம் போடாமல் உலக சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் ஐநாவில் சிறப்பு தீர்மானங்களை கொண்டு வருவதன் 
மூலம் சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்தச் செயற்குழு வாயிலாக வலியுறுத்துகிறோம்.

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)

3. திருமறைக்குர் ஆனில்  மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழ்க்கை
செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச்
சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம். என இந்த செயற்குழு வாயிலாக உறுதி ஏற்கிறோம்.

போதை ஒழிப்பு உடனடி தேவை

4. இந்தியா முழுவதும் நடமாடும் போதைப்
 பொருட்களையும், பல குடும்பங்களை சீரழித்துக்கொண்டிருக்கும் மதுவையும் நிரந்தரமாக தடை செய்ய தேசிய கொள்கையை  அரசியலமைப்புப்பிரிவு 47ன் படி ஒன்றிய அரசு 
 கொண்டுவர வேண்டும் என இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

இடஒதுக்கீட்டை அதிகரியுங்கள்

5.   தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு 
உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் மேலும் சாதிவாரிக்கணக்
கெடுப்பை 
எடுத்து இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments