ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.10 கோடியில் விரிவாக்க கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
விசைப்படகுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கிருந்து மீன்பிடிக்க செல்கின்றன. விசைப்படகுகளை நிறுத்தவும், மீன்களை பிடித்து வந்த பின் இறக்கவும் வசதியாக கடற்கரையையொட்டி மீன்பிடி இறங்குதளங்கள் 2 இடங்களிலும் உள்ளன.
இந்த நிலையில் மீன்பிடி இறங்குதளத்தில் படகுகளை நிறுத்தி மீன்களை இறக்குவதற்கு வசதியாக இந்த தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வந்த போது மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டார். இதில் தலா ரூ.10 கோடியில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் விரிவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
பணிகள் மும்முரம்
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி இறங்கு தளங்களில் விரிவாக்க பணிகள் தொடங்கின. கடல்பகுதியில் தற்போது உள்ள தளத்தில் விரிவுபடுத்த கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராட்சத எந்திரங்கள் கொண்டு தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். கோட்டைப்பட்டினத்தில் கடலில் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோட்டைப்பட்டினத்தில் 175 மீட்டர் நீளத்திற்கு மீன்பிடி இறங்குதளம் விரிவாக்கப்படுகிறது. இதில் தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜெகதாப்பட்டினத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும்'' என்றனர். இந்த பணிகள் முடிவடைவதின் மூலம் மீனவர்கள் கூடுதலாக விசைப்படகுகளை நிறுத்தி வைத்து மீன்களை இறக்க முடியும். மேலும் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைக்கவும் முடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.