விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு




விரைவில் திறக்கப்பட உள்ள பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.

ெரயில் பாலம்

பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலமும் கடந்த 3 நாட்களாக திறந்து மூடி நடந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் புதிய ரெயில் பாலத்தை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்தார். அவர் முதலாவதாக ரோடு பாலத்தில் நின்றபடி புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார்.

ஆய்வு

தொடர்ந்து ட்ராலி மூலம் புதிய ரெயில் பாலம் மற்றும் மையப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று முடிந்துள்ள பணிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள் குழுவினர் ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விளக்கி கூறினர்.

வருகின்ற வாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய பாலத்தை ஆய்வு செய்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் திறந்து ரெயில் போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரவு

தொடர்ந்து ெரயில்வே கோட்ட மேலாளர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் நிலைய கட்டிட விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments