அதிராம்பட்டினம் அருகே: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!




அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இக்குழந்தையை வீசி சென்றது யார் என போலிசார் விசாரனையில் தம்பிக்கோட்டை வடகாடு வீரையன் மகள் மீனா என்பதும் தெரியவந்தது. மீனாவிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் மாரி முத்துவும் காதலித்து வந்ததும் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் குளத்தில் வீசப்பட்டதாக மீனா ஒப்பு கொண்டுள்ளார்.

இக்குழந்தைக்கு காரணமானவர் மாரிமுத்துதான் எனவும், தெரிவித்திருக்கிறார்.

இதனை மாரிமுத்து மறுத்ததாக கூறப்படுகிறது,

இந்தநிலையில், பட்டுக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் கண்ணகி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், வி.ஏ.ஓ. சுந்தரி, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் முன்னிலையில் மரபணு ஆய்வுக்காக அதிராம்பட்டினத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments