தொண்டியில் இருந்து கோவை, மதுரைக்கு சிறப்பு பஸ்கள் எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தல்




தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தொண்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க வேண்டும். எம்.ஆர்.பட்டினம், பி.வீ.பட்டினம் பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். 10-வது வார்டு மேலத்தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அ.மணக்குடி வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ்சை தொண்டி வரை இயக்க வேண்டும். தேவகோட்டை, திருவாடானை, வட்டானம் வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ்சை தொண்டி வரை இயக்க வேண்டும்.

தொண்டியில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இயக்க வேண்டும். தொண்டி-மதுரைக்கு இடைநில்லா பஸ் இயக்க வேண்டும். தேவகோட்டையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து பஸ்சை தொண்டியில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற கருமாணிக்கம் எம்.எல்.ஏ. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் உடன்இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments