வீடுகளில் நூலகங்களை பராமரிப்பவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.
வீடுகளில் நூலகங்கள்
தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.
15-ந் தேதி கடைசி நாள்
புத்தக ஆர்வலர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் தங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள், அரிய வகை நூல்கள் இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை "மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு, டி.எஸ்.எண்.104, மேல 4-ம் வீதி, புதுக்கோட்டை-622 001" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். அல்லது dlopdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.