பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் செயலி மூலம் டிக்கெட் எடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி




பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் யூ.டி.எஸ். என்ற செயலி மூலமாக முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் எடுப்பது குறித்து ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட பட்டுக்கோட்டை பிரிவு வணிக ஆய்வாளர் சக்தி, நிலைய மேலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கு செயலி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றும், நேரம் மிச்சமாகும் என்றும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் கலியபெருமாள், பட்டுக்கோட்டை ரெயில் உபயோகிப்போர் சங்க தலைவர் விவேகானந்தம், துணைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் தமிழ்செல்வன், ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த சந்திரமோகன், ரெஜினால்ட் செல்வகுமார் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தை சார்ந்த ஜெயசீலன், சுகுமார் மற்றும் ரெயில் பயணிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி பட்டுக்கோட்டை ரெயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பில் யூ.டி.எஸ். செயலி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments