வட்டார ஐக்கிய ஜமாத் சார்பில் பனைக்குளம்-அழகன்குளம் இடையே சி.சி.டி.வி. கேமரா




மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைமை இடமாக கொண்டு செயல்படும் வட்டார ஐக்கிய முஸ்லிம் ஜமாத்துகள் சபை சித்தார்கோட்டை, வாழூர், அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற் றாங்கரை ஆகிய ஜமாத்துகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. இந்த வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத்துகள் சபை சார்பில் சித்தார்கோட்டை சாலையில் இருந்து நதிப்பாலம் வரை செல்லக்கூடிய மக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றாங்கரை சாலையில் இருந்து நதிப்பால சாலையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமரா அழகன்குளம்-பனைக்குளம் இடையே அமைப்பதற்காக நேற்று மாவட்ட துணை சூப்பிரண்டு சரவணனை சந்தித்து ஜமாத் நிர்வாகிகள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினர். அதன்படி வட்டார ஐக்கிய ஜமாத் சபை செயலாளர் அழகன்குளம் பக்ருல் அமீன் தலைமையில் ஜமாத் தலைவர்கள் ஆற்றாங்கரை சவுக்கர், அழகன்குளம் அகமது, பனைக்குளம் ஹம்சத் அலி, புதுவலசை ஷேக் முகம்மது, செயலாளர்கள் அத்தியூத்து நூருல் ஹசன், சித்தர்கோட்டை தவ்பிக் அலி, வாழூர் ஹம்சத் அலி, உறுப்பினர் சீனிசதக்கத்துல்லா உள்ளிட்டோர் வழங்கினர். இதன் மூலம் இரவு நேரங்களில் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பவர்களை கண்காணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments