பாம்பன் பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி இன்று சோதனை




பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று(வியாழக்கிழமை) 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடக்கிறது.

பாம்பன் புதிய பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ரெயில் பாலத்தின் அருகில் சுமார் ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்லும்போது மேல் நோக்கி திறந்துமூடும் வகையில் செங்குத்து வடிவிலான 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தூக்குப்பாலத்தை திறந்து மூடும் சோதனை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தப்பட்டு வந்தது. நேற்று மீண்டும் ரோடு பால உயரத்திற்கு முழுமையாக திறந்து மூடி சோதனை நடைபெற்றது.

அதிவேக சோதனை

மேலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது. மதியம் 1 மணியில் இருந்து 2.30 மணிக்குள், மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம் வரை இந்த சோதனை நடக்க இருக்கிறது. சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காலிப்பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை நடத்த ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

எனவே இன்று, அதிவேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் மண்டபம், பாம்பன், ராமேசுவரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என ரெயில்வே துறை எச்சரித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments