புதுக்கோட்டைமகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கான மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கட்டாய கண்காட்சி






புதுக்கோட்டையில் பூமாலை வணிக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கான, மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கட்டாய கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2024) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுய உதவிக்குழுப் பொருட்களுக்கான கண்காட்சிகளை மாவட்டம் மற்றும் மாநில அளவில் தமிழக அரசு நடத்தி வருகிறது. அந்தவகையில் இன்றையதினம், மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கான, மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கட்டாய கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.


அதன்படி, 2024-2025ம் நிதியாண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு 'கட்டாய கண்காட்சி' (ஆயனெயவழசல) நடத்தப்படுகிறது. இக்கட்டாய கண்காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இன்று 21.10.2024 முதல் 30.10.2024 வரை 10 நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 90 மகளிர் சுயஉதவி குழுக்களால் 73 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களைச் சார்ந்த 5 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கலந்து கொண்டது.

இக்கட்டாய கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, நாகர்கோவில், திருச்சி, சேலம், மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுவினர்களும், தங்களது உற்பத்திப் பொருட்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 50 -க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.

இக்கட்டாய கண்காட்சி, தீபாவளி பண்டிகையையொட்டி நடத்தப்படுவதால், தீபாவளி பண்டிகை சார்ந்த மகளிர் உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் மகளிர் உற்பத்திப் பொருட்களான சிறுதானியங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள், முந்திரிப்பருப்பு, தேன் நெல்லி, குல்கந்து, தேன், செட்டிநாட்டு தின்பண்டங்கள், ஊறுகாய்கள், வத்தல், வடகம், மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் டெரகோட்டா பொம்மைகள், செயற்கை பூக்கள், பூஞ்சாடிகள், பூந்தோரணங்கள், சணல் பைகள், பட்டை வயர் கூடைகள், குந்தன் நகைகள், பேன்சி நகைகள், மர பொம்மைகள், மண்புழு உரம், மணிபர்சுகள், லெதர் பேக்குகள், கீ செயின், ரெடிமேட் ஆடைகள், காட்டன் புடவைகள் மற்றும் பட்டுப் புடவைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், தலையணை உரை, குல்ட், துண்டுகள் மற்றும் போர்வைகள், அதிரச மாவு, முறுக்கு மாவு, பாசிப்பருப்பு உருண்டை மாவு, ராவா லட்டு மாவு போன்ற தீபாவளிக்கு தேவையான பலகார மாவுகள் தரமானதாக விற்பனை செய்யப்படும் நர்சரி செடிகள், அழகிய வண்ண பூஞ்செடிகள், பழமரக்கன்றுகள் போன்ற சுய உதவிக்குழு தயாரிப்புகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் தரமானதாகவும், நியாயமான விலையிலும் இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் ஆகும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர்களின் உற்பத்தி பொருட்களை உரிய முறையில் வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள சிறுதானிய இனிப்பு, காரம் வகைகள் மற்றும் இதரப் பொருட்களின், சிறப்பு விற்பனைக் கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.கே.ஸ்ருதி, உதவி திட்ட அலுவலர்கள் திரு.கே.கவியரசன், திரு.ஆசிர்வாதம், திருமதி.தில்லைமணி, செல்வி.மகாதேவி, திரு.சி.சசிகுமார், னுளுஆளு மேலாளர் திரு.ஆர்.அருண்குமார், DRP பண்ணை திரு.ப.கருப்பையா, திரு.ராஜ்மோகன், மகளிர் திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments