ஆவுடையார்கோவில் ஒக்கூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 8 பெண்கள் காயம்




ஆவுடையார்கோவில் புண்ணியவயல் கிராமத்தை சேர்ந்த 8 பெண்கள் ஆட்டோவில் விவசாய வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். ஒக்கூர் பன்னியூர் பிரிவு சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த தள்ளுவண்டி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments