நூதன முறையில் பண மோசடி: ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தல்




நூதன முறையில் மோசடி நடைபெறுவதால் ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

பட்டாசுகள்

தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பண்டிகைக்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு, புதிய ஆடை, இனிப்பு பலகாரம் தான். அதனால் இதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்றவாறு வாங்கி மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் பண்டிகையையொட்டி பட்டாசுகள் வித, விதமாக விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல ஆன்லைனிலும் பட்டாசுகள் விற்பனை தொடர்பாக மக்கள் பதிவு செய்து வாங்கி வருகின்றனர்.

பண மோசடி

இந்த நிலையில் ஆன்லைனில் பட்டாசு விற்பனையில் மர்மநபர்கள் சிலர் நூதன முறையில் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் பணத்தை பெற்ற பின், அவர்கள் ஆர்டர் செய்த பட்டாசுகளை அனுப்பி விடாமல் மோசடி செய்து விடுகின்றனர். மேலும் பொதுமக்களை சிலரை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும் ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்தால் அனுப்பி வைப்பதாகவும் கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் விழிப்புணர்வுடன் உஷாராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் உண்மையானதா? அவர்களது முழு முகவரி விவரம், செல்போன் எண் விவரம் உள்ளிட்டவற்றை விசாரித்து, நம்பகதன்மையானதா? என உறுதி செய்து கொள்ளவும்.

தொலைபேசி எண்

பண்டிகை நேரத்தில் மோசடி வலையில் பொதுமக்கள் சிக்கி கொள்ள வேண்டாம். மேலும் இது தொடர்பாக மோசடியில் ஏமாந்து பணத்தை இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments