கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்!




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 25/10/2024 மதியம் 3.00 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் மேலாண்மை குழு தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 
 
பள்ளியின் ஆசிரியர் சாகுல் ஹமீது அவர்கள் உறுப்பினர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார். 

கூட்டத்தில் முதன்மை தீர்மானமாக பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மாதந்தோறும் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் மற்றும் பள்ளிக்கு அடிப்படை தேவைகள் குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

 தலைமை ஆசிரியர் சிலுவை ராஜ்  அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு அதனடிப்படையில் தீர்மானத்தை பதிவு செய்தார், மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சிறப்பாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியரின் பணிகள் மேலும் சிறக்க பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments