மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்




மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய  திரு ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் தொடங்கியது. 

இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு, போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைத்தல்,
 போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களை அமைத்தல், பள்ளியில்  நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வும் , உட்குழு அமைத்தல் பற்றியும் , பள்ளிக்கல்வித்துறை  இலவச  மைய அழைப்பு எண் 14417 மற்றும்  குழந்தைகள் உதவி மைய எண் 1098 போன்ற தகவல்களை  குழுவில் விவாதிக்கப்பட்டது.

விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவித்தல் வேண்டும் என்ற தகவலையும் திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்ற விழிப்புணர்வு சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும்  இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் (ஓய்வு) திரு.திருமுகம் திரு சௌந்தரராஜன் மற்றும் பள்ளியின்  ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments