பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 17 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்




ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பிர்காவில் 17 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்தனர். ஆனால் போதிய மழை பெய்யாததால் நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர்காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. இதனை உடனடியாக மாற்றி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீட்டு தொகை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments