கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் ஜமாத் நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் மற்றும் படித்துறை அமைத்தல்




புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் முக்கியமான இடங்களான நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்து  இருந்தது. அதனை கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம் சார்பாக  29.10.2024 செவ்வாய்க்கிழமை நேற்று ஜேசிபி JCB இயந்திரத்தின்  மூலமாக அகற்றப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கிடந்த குப்பைகளையும் அகற்றப்பட்டது. 

நெடுங்குளத்தில் உள்ள படித்துறை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.அதை உடனடியாக ஜமாத் சார்பாக படித்துறை சீராமிக்கப்பட்டது.   கோபாலப்ட்டிணம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகளை செய்த   கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகத்திற்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments