கோபாலப்பட்டினத்தில் பைத்துல்மால் கமிட்டி சார்பாக இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி




கோபாலப்பட்டினத்தில் பைத்துல்மால் கமிட்டி சார்பாக இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து பைத்தூல்மால் வெளியிட்டுள்ள அறிக்கையில்
 
நமது கோபாலபட்டினம் பைதுல்மால் கமிட்டி நிர்வாகத்தின் சார்பாக நமதூரில் பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், நலத்திட்டங்கள் என பல்வேறு மனித நேய மக்கள் பணிகளை தொடந்து செய்து வருகிறது. அதன் அடிப்படையில் பைத்துல்மால் சார்பாக 05-10-2024 அன்று  இரண்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு  தையல் மிஷின் வழங்கப்பட்டது 

மேலும் மக்களிடமிருந்து பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. 
                                                                                                                                                                 
பைத்துல்மால் கமிட்டியின் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களில் முதன்மையான மாதந்திர உணவுப் பொருட்கள்

தையல் பயிற்ச்சி வகுப்புகள்
வட்டியில்லா நகை கடன் உதவிகள்
மற்றும் கல்விக்கான உதவிகள், என இன்றும் என்னற்ற சேவைகளைச் செய்து வருகிறது.

நமதூர் ஏழை எளிய வரிய நிலை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்மை படுத்தவும், சீர்படுத்தவும் கோபாலப் பட்டினம் பைத்துல்மால் அமைப்பில் இணைந்து கொள்வீர்களாக! வருடாந்திரசந்தா தொகை இரண்டாயிரம் செலுத்தி உறுப்பிர்களாக இனைந்து கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments