ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிஙகம். இவர் 2009-ம் ஆண்டு புதிதாக மின் இணைப்பு வழங்கக்கோரி கடலாடி மின்வாரிய அலுவலகத்தில் மனுசெய்தார். இந்த மின் இணைப்பு வழங்குவதற்கு கடலாடி மின்வாரிய இளநிலை மின் பொறியாளர் முருகன் என்பவர் ரூ.1000 லஞ்சம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசிங்கம் இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்
அவர்களது ஆலோசனையின்படி துரைசிங்கம், ரசாயனம் தடவப்பட்ட ரூ.1000 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற போது போலீசார் முருகனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்டடில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் ராம், லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் முருகனுக்கு 2 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.