ஆவுடையார்கோவிலில் இருந்து பன்னியூர் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்




ஆவுடையார்கோவிலில் இருந்து பன்னியூர் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்சை தொடங்கி வைத்தார். இதில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ராமநாதன், புண்ணிய வயல் ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் சுரேஷ் பார்த்திபன், அறந்தாங்கி கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments