இந்திய கடலோர காவல் படையில் சேர புதுக்கோட்டை மாவட்டம் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி




மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ வாரிசு இளைஞர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையில் சேருவதற்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள 12-ம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் பாடகுறிப்பேடுகள், காலணிகள் ஆகியவற்றுடன் மாதம் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments