கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் CCTV கேமரா அமைத்த தெருமக்கள்!




கோபாலப்பட்டிணம் பழைய காலனி தெருமக்கள் சார்பாக தெரு முழுவதும் CCTV கேமரா பொருத்தப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பழைய காலனி தெருமக்கள் சார்பாக தெரு முழுவதும் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தெருக்களில் குற்றச்சம்பவங்கள் மற்றும் திருட்டுகள் ஏதேனும் நடக்காமல் இருப்பதற்காக தெரு முழுவதும் CCTV கேமரா பொருத்த வேண்டும் என்று தெரு மக்களின் சார்பாக முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளிடம் முறையான கடிதம் கொடுத்து கேமரா பொருத்த அனுமதி கேட்டார்கள். ஜமாத் நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கேமரா கண்காணிப்பு குழு அமைத்து அனுமதி வழங்கினார்கள்.
1.அலி அக்பர் S/O அகமது கபீர்
2.வாசிம் கான் S/O முகம்மது யூசுப்
3.B.அசாருதீன்  S/Oபாரூக் அலி
4.முஸ்தாக் S/Oஅப்துல் காதர்

இந்த நான்கு நபர்களும் தெரு மக்களிடம் முறையாக வசூல் செய்து 24 CCTV கேமரா தெரு முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது. இது போல் அனைத்து தெருக்களிலும் CCTV  கேமரா பொருத்தினால் நமது ஊர் பாதுகாப்பாகவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் முடியும்.

இதற்காக பொருளாதார உதவிகள் வழங்கிய தெரு மக்களுக்கும் இதை முன்னின்று சிறப்பாக செயல்படுத்திய கேமரா குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மற்றும் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளுக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments