வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து நவ. 11-இல் ஆா்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து  நமது மாவட்டம் சார்பாக. புதுக்கோட்டையில்  வருகின்ற 11.11.24 அன்று நடைபெறுவதை முன்னிட்டும் , ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி  இப்ராஹீம் (அலை) பத்துமாத கால செயல்திட்டத்தை முன்னிட்டும் அறந்தாங்கி மர்க்கஸில், 02.11.2024 சனிக்கிழமையன்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, மாநிலச் செயலாளர் K.ரஃபீக் முகம்மது அவர்கள் தலைமை வகித்தார்கள். 
மாவட்டத் தலைவர் H.சித்திக் ரகுமான்.,B.E, மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் S.ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள்  முகமது மீரான்,  அப்துல் ரகுமான் ரஹுஃப், மருத்துவ அணிச் செயலாளர் சபியுபுல்லா,  வர்த்தகரணி செயலாளர் N.உஸ்மான் அலி,மாணவரணி செயலாளர் ரகுமத்துல்லா MISC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், துவக்க உரையாக அபூபக்கர் MISC அவர்களும், TNTJ மாநில செயலாளர் K. ரஃபீக் முகம்மது அவர்களும்  மற்றும் மாவட்ட தலைவர் H.சித்திக் ரகுமான் அவர்களும் சிறப்புரையாற்றினார். 

 இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கண்டன ஆர்ப்பாட்டம்

1.வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் வருகின்ற 11. 11.24 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் மக்கள் திரல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை இச் செயற்குழு கூட்டம்  வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றோம். இதில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து

2. .ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட்டின் பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான சமீபத்திய கருத்து பெரும் அதிர்ச்சியை மக்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது, சட்டத்தின் படி ஆவணங்களின் படி வழங்க வேண்டிய தீர்ப்புக்கான தீர்வை கடவுளிடம் இருந்து பெற்றேன் என்று சொல்வது இந்திய நீதி பரிபாலனத்தை உலகம் எள்ளி நகையாடக்கூடிய சூழலை உருவாக்கி உள்ளது என இந்த செயற்குழு வாயிலாக கொள்கிறோம்.


வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா

3. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து 
இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை   இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த 
செயற்குழு வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின்
சொத்துக்களையும்  பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

இஸ்ரேலின் அராஜகங்கள்

4. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கெதிரான இன அழிப்பில் இதுவரை சுமார் 42000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், தற்போது லெபனானிலும் மேற்கு கரை மற்றும் காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீதும் கொடூர தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கனவர்களை   கொன்று குவித்து வருகின்றனர் குழந்தைகளை குறிபார்த்து சுடும் அராஜகமும் நடைபெற்று கொண்டு உள்ளது. இப்படிப்பட்ட அக்கிரமங்களை அரங்கேற்றும் ஜியோனிஸ பயங்கரவாதிகளை இச்செயற்குழு வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அமெரிக்க , ரஷய நாடுகளின் நன்மைகளை
உறுதி செய்யும் போராக இது மாறிவிடாமல் பாலஸ்தீன மக்களுக்கான நீதி கிடைப்பதில் காந்தி பிறந்த இந்த இந்தியாபொறுப்புடன் செயல்பட வேண்டும் என இந்த செயற்குழு வாயிலாக வலியுறுத்துகிறோம்.

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)

5. திருமறைக்குர் ஆனில்  மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழ்க்கை
செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச்
சிறப்பாக அருளால் செய்வோம் என இந்த செயற்குழு வாயிலாக உறுதி ஏற்கிறோம்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments