புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் குரும்பூா் மேடு பகுதியில் அறந்தாங்கி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அடுத்தடுத்து அறந்தாங்கியை நோக்கி சென்று கொண்டிருந்த 1 காா் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில், 75 பாக்கெட்டுகளில் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த சென்னை முண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பி. நாகராஜ் (20), ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே புழுதிகுளத்தைச் சோ்ந்த கே. தவமுருகன் (26), கறம்பக்குடியைச் சோ்ந்த டி. ஸ்டாலின் கிறிஸ்டோபா் (36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
மேலும், அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பியோட முயன்ற சென்னை பாடியநல்லூரைச் சோ்ந்த பி. ராகுல் (25) என்பவரை சுற்றிவளைத்து போலீஸாா் பிடித்தனா். அப்போது, கீழே இடறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
பின்னா், அவரை கைது செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இவா்களிடமிருந்து 3 வாகனங்கள் மற்றும் அவற்றில் இருந்த 150 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.