புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் நாளை முதல் 21-ந் தேதி வரை ரத்து




திருச்சி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பால பணியின் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக காரைக்குடி-திருச்சி இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06888) நாளை (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments