புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா' திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்.

போலீஸ் அக்கா திட்டம்

பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக போலீசாரை எளிதாக அணுகும் வகையில் காவல்துறையில் ‘போலீஸ் அக்கா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா' திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் பள்ளி மற்றும் 41 கல்லூரிகளில் 30 போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண் போலீசார், காவல் அதிகாரிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, அவ்வப்போது பொது நிகழ்விலும் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான, பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பார்கள்.

கியூ ஆர் கோடு

மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக ‘போலீஸ் அக்கா' செயல்பட்டு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா' திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி பற்றி அறிய இத்திட்டத்தின் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து உதவி கோரலாம்.

மாணவ-மாணவிகளும் பகிரும் கருத்துக்கள் ரகசியமாக வைக்கப்படும். இத்திட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் செயல்படுத்தப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments