மீமிசல் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்




கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் தலைமையிலான தனிப்படை போலீசார் மீமிசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீமிசல் அருகே அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில் கொலுவன் ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவர் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் டிராக்டர் உரிமையாளர் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து மணமேல்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments