கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியாக தான் நடந்து சென்று வருகிறார்கள். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பி மூலம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை தார் சாலையாக அமைக்க பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல கோரிக்கைகளும் வைத்து சரி செய்யப்படவில்லை. தற்போது மழைக்காலமாக இருப்பதால் பழுதடைந்த சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments