தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நேற்று 11/11/2024 மாவட்ட தலைவர் H.சித்தீக் ரகுமான் B.E.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முகம்மது ஒலி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தனது கண்டன உரையில் வக்ப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது, வக்ப் வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது சங்க பரிவாரங்களின் முஸ்லீம் வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்றும், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசிச பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன, அவற்றை அபகரித்து அதானி, அம்பானி, உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது என்று கூறினார்.
வக்ப் வாரிய உறுப்பினராக இரண்டு முஸ்லீம் அல்லாதவரை நியமிக்கக் கூடிய நடைமுறை பாஜக ஆளும் மாநிலங்களில் வக்ப்வாரியத்தை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்கப்பயன்படுத்தப்படும் என்றார் மேலும் இதே நடைமுறை கோயில் மற்றும் சர்ச் நிர்வாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த மசோதாவானது வக்ப்வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும், ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளை செய்யும் நடைமுறை என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வுகாணும் அதிகாரம் கலெக்டர் உள்ளிட்ட வருவாய்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வக்ப்வாரிய தீர்ப்பாயத்தை (Tribunal) நீர்த்துப்போகச் செய்துள்ளனர்.
இத்தனை குளறுபடிகளோடு வந்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆளும் ஒன்றிய அரசு கட்டாயம் திரும்பபப் பெற்றே ஆக வேண்டும், அதுவரை எமது போராட்டங்கள் கடும் வீரியத்துடன் தொடரும் என்று கூறினார்.
இந்தப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்துகொண்டனர்,
போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் நன்றியுரை வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.