தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு வருகைதர உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வருகைதர உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.11.2024) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு (2024 - 2025) குழு 19.11.2024 செவ்வாய்க்கிழமையன்று வருகை தந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யும் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, புதுக்கோட்டை மாவட்ட செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்யப்பட்டு பெறப்பட்ட மனுக்களில் குழு தெரிவு செய்த மனுக்கள் மீதான பதிலறிக்கைகளை ஆய்வு செய்திட உள்ளது. அதன்படி, இன்றையதினம் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதரும் அன்று அவர்களுக்கு தேவையான வாகன வசதி, இருப்பிட வசதிகள் குறித்தும், ஆய்வு செய்யும் பணிகளின் முன்னேற்பாடுகள் குறித்தும், ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத் தலைவர்ஃ அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமசந்திரன் அவர்கள், உறுப்பினர்கள் திரு.வி.பி.கந்தசாமி அவர்கள், திரு.கே.பி.சங்கர் அவர்கள், திரு.கு.சின்னப்பா அவர்கள், திரு.செ.சுந்தரராஜன் அவர்கள், திரு.அ.சௌந்தரபாண்டியன் அவர்கள், திரு.மு.பாபு அவர்கள், திரு.தே.மதியழகன் அவர்கள், திரு.தி.ராமச்சந்திரன் அவர்கள், திரு.மு.ஜெகன்மூர்த்தி அவர்கள், திரு.ஒ.ஜோதி அவர்கள், செயலக முதன்மைச் செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் அவர்கள், இணைச் செயலாளர் திருமதி.இரா.சாந்தி, துணைச் செயலாளர் திருமதி.சீ.உஷா, சார்புச் செயலாளர் திரு.க.சந்தானம் ஆகியோர் வருகை புரிய உள்ளார்கள்.
எனவே அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மனுக்கள் மீதான பதிலறிக்கைகளை தயார் நிலையில் வைத்திடவும், உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.அப்தாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.எஸ்.ஜி.சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.கௌதம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments