மாவட்டத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாமில் பெறப்பட்ட வாக்காளர்களின் 36,524 படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட வாக்காளர்களின் 36,524 படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியில் கடந்த 16, 17, 23, 24-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்களில் 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,869 விண்ணப்ப படிவங்களும், பெயர் நீக்க 4,366 படிவங்களும், திருத்தம் மேற்கொள்ள 7,289 படிவங்களும் என மொத்தம் 36,524 படிவங்கள் பெறப்பட்டன.

கணினியில் பதிவேற்றம்

இந்த நிலையில் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் முகவரியில் கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விண்ணப்ப படிவங்களை செல்போன் செயலியில் பதிவேற்றப்படுகின்றன. செயலியில் பதிவேற்ற முடியாதவர்களுக்கு பயிற்சி அளித்து பதிவேற்றப்படுகிறது. மேலும் தேர்தல் பிரிவு அலுவலகங்களில் கணினியிலும் பதிவேற்றப்படுகிறது. மொத்த படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணியில் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும். வருகிற ஜனவரி மாதம் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது புதிய வாக்காளா்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். பெயர்கள் நீக்கத்தில் நீக்கப்பட்டிருக்கும். அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தின் மூலம் வினியோகிக்கப்படும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments