அவ்வையார் விருது
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேற்படி விருதிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதி உடைய 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்த படிவத்தினை உரிய ஆவணங்களுடன் அதற்கான கருத்துருவினை, புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
சமூக சேவை
இந்த விருது பெற குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலாக நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு, கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.