இடிக்கப்பட்ட பாபரி மசூதிக்கு நீதி கேட்டும் வழிபாட்டுதலங்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டியும் வக்ப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வழியுறுத்தியும் ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்




பள்ளிவாசல் சொத்துகளை கபளீகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம் 1991-ஐ முழுமையாக கடைப்பிடிக்க கோரியும் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு த.மு.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.மு.மு.க. துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, அப்துல்காதர் மன்பயி, உசேன்கனி, சம்சுதீன்சேட், ஷான்ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம் தெற்கு, மேற்கு, மத்தி, கிழக்கு, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தலைவர்கள் வாவா ராவுத்தர், ஷேக்அப்துல்லா, இப்ராஹிம், பட்டாணி மீரான், ஷேக்தாவுதீன், துல்கருணைசேட் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments