மீமிசல் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது




மீமிசல் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

மீமிசல் அருகே உள்ள சாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராக்கு (வயது 65). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், மூதாட்டி ராக்குவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ராக்கு அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகானந்தன் மகன் சந்தோஷ் (26) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து, அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மேற்பார்வையில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவரை மீமிசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சங்கிலி பறிப்பு வழக்கில் குற்றவாளியை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுவாக பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments