‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண பொருட்கள்




‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், அரிசி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், துண்டு, வேட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அறந்தாங்கி அருகே அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் இப்ராஹிம், செயலாளர் முகமது அலி மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அந்த நிவாரண பொருட்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments