மணமேல்குடி அருகே மழைநீர் கடலில் கலக்கும் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கடற்கரை பகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வியாழன் முதல் நேற்று முன்தினம் வரை பரவலாக மழை பெய்தது. இதில் கடற்கரை பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மணமேல்குடி பகுதியில் கடற்கரையையொட்டியுள்ள மீனவ கிராமங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கின. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த நிலையில் மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தில் இருந்து கடலில் மழை தண்ணீர் கலக்கக்கூடிய நீர்வழி ஓடை பாதையில் தனியார் மூலம் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தண்ணீர் வழிந்தோடாமல் ஊருக்குள் புகுந்து தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இறால் பண்ணைகள் அகற்றம்
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர் உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நீர்வழிபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 5 தனியார் இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பண்ணையில் இறால் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குட்டைகள்அகற்றப்பட்ட பின் மழைநீர் வழிந்தோடி கடலில் கலந்தது.
அதன்பின் ஊருக்குள் தேங்கிய மழைநீர் வடிந்தது. தனியார் இறால் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சார இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் இனி ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றப்படுவதை அறிந்த தனியார் நிறுவனத்தினர் உடனடியாக அதில் இருந்த இறால்களை பிடித்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.