நெடுங்குளம் வந்தடைந்தது தொடரேந்தல் கண்மாய் தண்ணீர் நிரம்பி வரும் நெடுங்குளம்





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை நீரை நம்பி தான் இந்த நெடுங்குளம் உள்ளது. பல வருடங்களாக இந்த குளத்திற்கு தண்ணீர் வராமல் வாய்க்கால் அடைப்பட்டது.அதை உடனடியாக ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக நெடுங்குளத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் குளத்திற்கு விடப்பட்டது.தற்போது மழைக்காலமாக இருப்பதால் தண்ணீர் வரவேண்டிய வாய்க்காலை சரி செய்து சிமெண்ட் தூம்பு அமைக்கப்பட்டது. அதன் பிறகு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் கிராம நிர்வாகிகளை தொடர்பு கொண்டும் தண்ணீர் வரவேண்டிய வழிகளை சரிசெய்து தற்போது தொடரேந்தல் கண்மாயில் இருந்து நமது நெடுங்குளத்திற்கு தண்ணீர் நிரம்பி வருகிறது. குளத்திற்கு தண்ணீர் வருவதால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.அரசு அதிகாரிகளையும்,கிராம நிர்வாகிகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதை சரியான முறையில் செயல்படுத்திய நமது கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகத்திற்கும்  மற்றும்  கமிட்டியாளர்களுக்கும் இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அத்துனை பேருக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.




premium bootstrap themes

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments