பருவ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியான அளவு மழை பெய்தது. பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. ஒரு சில குளங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன.
இந்த நிலையில் இம்மாதத்தில் மழை சற்று அதிகமாக பெய்துள்ளது. இதில் கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பரவலாக பெய்தது. இதிலும் கடற்கரை பகுதியான மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் பல நிரம்பி உபரி நீர் வெளியேறின.
முழு கொள்ளளவு
இந்த நிலையில் மாவட்டத்தில் மற்ற இடங்களில் அதிகமாக மழை இல்லாததால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. பல இடங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுகின்றன. திருமயம், பொன்னமராவதி, குளத்தூர், இலுப்பூர், விராலிமலை, கந்தர்வகோட்டை தாலுகா பகுதிகளில் அதிக மழை இல்லை.
அதனால் அப்பகுதிகளில் குளங்களில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 961 குளங்கள் உள்ளன. இதில் 187 குளங்கள் முழுமையாக நிரம்பின. இதில் 100 சதவீதம் முழு கொள்ளளவை நீர்மட்டம் எட்டியுள்ளதோடு, உபரி நீர் வெளியேறி செல்கிறது.
25 சதவீதத்திற்கும் குறைவாக...
இதேபோல 159 குளங்களில் நீர்மட்டம் 75 சதவீதத்திற்கு மேலும், 142 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. 231 குளங்கள் 25 முதல் 50 சதவீதம் வரையும், 242 குளங்கள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர்மட்டம் காணப்படுகிறது.
பருவ மழை இன்னும் நீடிக்கும் என்பதால் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.