மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மணமேல்குடியில் இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நஸ்மின் அசீது ஹமதியா என்ற மாணவி இதுவரை பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டது.
இதே போல் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து துர்க்கேஸ்வரன் மாணவர் இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசிப்பது தெரிய வந்தது.
இம்மாணவர் கறம்பக்குடி ஒன்றியத்தில் ராங்கியன் விடுதி பள்ளியில் படித்து வந்ததாக தகவல் தெரிவித்தார். நான்காம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்காக மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு . வீரமணி மற்றும் ஆசிரியர் உமா ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.