அறந்தாங்கி அருகே மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை பதாகை வைத்த கிராம மக்கள்




அறந்தாங்கி அருகே திருவாப்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள் தட்டான் வயல் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். பின்னர் மது போதையில் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் கால்களை கண்ணாடி சிதறல்கள் பதம் பார்த்து விடுகின்றன. இதையடுத்து, தட்டான்வயல் கிராம மக்கள் பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்தக்கூடாது என்று எச்சரிக்கை பதாகையை வைத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட போலீசார் இப்பகுதியில் மது அருந்துவோர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments