புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இறால் பண்ணைகள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகா பகுதிகளில் கடற்கரையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் கடலுக்கு வடிந்தோடக்கூடிய நீர்வழிப்பாதைகளும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த நிலையில்ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கலெக்டர் அருணா உத்தரவிட்டார். மேலும் கடற்கரையையொட்டி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த இறால் பண்ணைகளால் மழைநீர் வடிந்தோடாமல் தேங்கியது. இதனால் 5 இறால் பண்ணைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள்
இந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களில் கடற்கரை பகுதிகளில் வேறெங்கும் ஆக்கிரமிப்பில் இறால் பண்ணைகள் வைத்திருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். மேலும் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகாவில் கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீர் வடிந்தோடி கடலில் கலக்கக்கூடிய பகுதிகள், அதன் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றவும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.பட்டா நிலங்களில் இறால் பண்ணைகள் இருந்தால் அதனை தவிர்த்துவிடவும் அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.