பல்லவன் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் மாற்றத்தால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். ‘புஷ்பேக்' இருக்கைகள் மீண்டும் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லவன் ரெயில்
காரைக்குடி-சென்னை இடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் வசதியாக உள்ளது. இந்த ரெயில் முன்பதிவு இருக்கைகள், ஏ.சி. சேர் கார் பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும். இதில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். குறிப்பாக முன்பதிவு இருக்கைகள் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் மாற்றப்பட்டு வருகிறது. இந்த இருக்கைகள் பயணிகளுக்கு அசவுகரியத்தை கொடுத்துள்ளது. முன்பு போல ‘புஷ்பேக்’ இருக்கைகள் இல்லாமல், சாதாரண இருக்கைகள் போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பயணிகள் கோரிக்கை
இது தொடர்பாக பயணிகள் கூறியதாவது:- காரைக்குடி-சென்னை இடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணமானது சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். இதில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் போது ‘புஷ்பேக்’ இருக்கைகள் வசதியாக இருந்தது. பயணிகள் அதில் அமர்ந்து செல்லும் போது சவுகரியமாக இருக்கும். தண்ணீர் பாட்டில் வைத்து கொள்ளவும், உணவு வைத்து சாப்பிடவும் பலகை இருக்கும். ஆனால் தற்போது இந்த ‘புஷ்பேக்’ இருக்கைகளுக்கு பதிலாக சாதாரண இருக்கைகள் முன்பதிவு பெட்டிகளில் மாற்றப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 13 பெட்டிகளில் 6 பெட்டிகள் வரை இருக்கைகளை மாற்றி விட்டனர். ஒரே இருக்கையில் 3 பேர் ஒன்றாக அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கை உள்ளது. இதில் நெடுநேரம் அமர்ந்து பயணிக்கும் போது அசவுகரியத்தை கொடுக்கிறது. முதியவர்கள், கர்ப்பிணிகள் என பலதரப்பட்ட பயணிகளுக்கும் முதுகு வலியை ஏற்படுத்துகிறது. எனவே ‘புஷ்பேக்’ இருக்கைகளை மீண்டும் அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரெயில்வே அதிகாரி
இதற்கிடையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு ரெயில்வே உபயோகிப்பாளர் இயக்கத்தினர் இது தொடர்பாக கோரிக்கையை தெரிவித்துள்ளனர். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளரின் எக்ஸ் தளத்திலும் இந்த கோரிக்கையை பதிவிட்டிருக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.