வெளிநாடுகளில் இருந்து புதுக்கோட்டைக்கு ரூ.1 கோடியில் கடற்பாசி இறக்குமதிக்கு திட்டம்




வெளிநாடுகளில் இருந்து புதுக்கோட்டைக்கு ரூ.1 கோடியில் கடற்பாசி இறக்குமதி செய்ய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கடற்பாசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் உள்பட அதன் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பு தொழிலில் மீனவர்கள், மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடற்பாசி தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் விதைப்பாசி உற்பத்தி செய்யவும், கடற்பாசியின் தன்மையை அதிகப்படுத்தவும் வெளிநாடுகளில் இருந்து கடற்பாசியை இறக்குமதி செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இறக்குமதிக்கு திட்டம்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து கடற்பாசிகளை இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.1 கோடி அளவில் கடற்பாசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதில் அனுமதி கிடைத்ததும் கடற்பாசிகள் படிப்படியாக இறக்குமதி செய்யப்படும்.

மேலும் மானியத்தில் கடற்பாசிகளை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கடற்பாசி உற்பத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments