மணமேல்குடி ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு முன் திட்டமிடல் கூட்டம்




புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்  திரு. செழியன் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  

இந்நிகழ்வில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ,
4 மற்றும் ஐந்தாம் வகுப்பு ஒரு பிரிவாகவும் பயிற்சிக்கு தேவையான கற்றல் உதவி உபகரணங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடத்திற்கு கற்றல் உபகரண பொருட்கள் தயாரிக்கப்பட்டது.
 மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும்  கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் தயாரிக்கப்பட்டது.

முன் திட்டமிடல் கூட்டத்தில்  பாலசுப்பிரமணியன் முனியன், பொவுலின் அருள் விஜயா அனுசியா, கண்ணன் முத்துக்குமார் இசக்கியப்பன் ராதா  மற்றும் ஜெபமலர் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் கற்பித்தல் உதவி உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments