பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம் முன்பதிவு நாளை தொடங்குகிறது



பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

கன்னியாகுமரி

பொங்கல் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் புதுக்கோட்டை வழியாகவும், ராமநாதபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறந்தாங்கி வழியாகவும் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06093) புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு 14-ந் தேதி காலை 6.15 மணிக்கு வந்து 6.17 மணிக்கு புறப்படும். இதேபோல் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06094) புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு 14-ந் தேதி இரவு 9.58 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்படும்.

தாம்பரம்

இதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06104) வருகிற 10, 12, 17-ந் தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு அன்றைய தினங்களில் மாலை 6.15 மணிக்கு வந்து மாலை 6.16 மணிக்கு புறப்படும். இதேபோல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06103) வருகிற 11, 13, 18 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும்.

இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு அன்றைய தினங்களில் நள்ளிரவு 1.29 மணிக்கு வந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments