புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு




இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தப்பணிகள் கடந்த ஆண்டில் (2024) நடைபெற்று வந்தன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள வாக்காளர்கள் விண்ணப்பித்து வந்தனர். மேலும் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வந்தன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் நடைபெற்றன. வாக்காளர்களிடம் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் புதிதாக விண்ணப்பித்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்களுக்கு புதிய அடையாள அட்டை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருணா, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடுகிறார். இதில் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் தெரியவரும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments