கோட்டைப்பட்டினம் அருகே கஞ்சா வழக்கில் மேலும் ஒருவர் கைது 2 படகுகள் பறிமுதல்




கோட்டைப்பட்டினம் அருகே கஞ்சா வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா பறிமுதல் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே கிழக்குகடற்கரை சாலையில் கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்றைய தினம் லாரியின் டிரைவரான காரைக்காலை சேர்ந்த சிலம்பரசன், பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் இலங்கைக்கு படகில் கஞ்சாவை கடத்த இருந்தது தொடர்பாக அம்மாபட்டினத்தை சேர்ந்த பக்ரூதின் (வயது 30), ஆவுடையார்கோவில் அருகே கதிராமங்கலத்தை சோ்ந்த மாரிமுத்து (69), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த மணிகண்டன் என்கிற கோல்டு மணி (41) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

அதன்பின் தொடர்ந்து விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதப்பட்டினத்தை சோ்ந்த சின்னராஜாவை (37) போலீசாா் கைது செய்தனர். மேலும் பக்ரூதின், சின்னராஜா ஆகிய 2 பேரும் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரிந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த 2 படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரிடம் இருந்து 7 செல்போன்கள், 2 ஜி.பி.எஸ். கருவிகள் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments