வன உயிரினங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் வன உயிரினங்களை வேட்டையாடும் நபர்கள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி வனப்பகுதியில் முயல், மான், உடும்பு, எறும்புதிண்ணி, கொக்கு உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக யாரேனும் வேட்டையாடுகின்றனரா? என கண்காணித்து வந்தனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலுப்பூர் அருகே கழுஞ்சி குளத்தில் சம்பவத்தன்று இரவு ஒரு கும்பல் பறவையினங்களை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது.
3 பேர் கைது
இதையடுத்து புதுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு குளத்தில் கொக்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் மற்றும் 18 வயதுடைய 2 பேர் என மொத்தம் 3 பேர் சிக்கினர். அவர்கள் கவுட்டை, கம்பு, கன்னி மூலம் கொக்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் 12 கொக்குகளை வேட்டையாடி வைத்திருந்தனர். இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 12 கொக்குகளை மண்ணில் புதைத்து அழித்தனர். கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
எச்சரிக்கை
வன உயிரினங்களை வேட்டையாடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். வன உயிரினங்களை வேட்டையாடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.