ஆவுடையாா்கோவிலில் அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்ய கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீமிசல் முக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வட்டாரச் செயலா் எம்எஸ். கலந்தா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சுப்பிரமணியம், தென்றல் கருப்பையா உள்ளிட்டோரும் பேசினா்.

இதில், மாகாளியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி கருப்பையா மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட ஆவுடையாா்கோவில் பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆவுடையாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments